திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற ‘மாமன்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் நடிகர் சூரி கலந்துகொண்டார். அப்போது, அவர் பழைய வேலை செய்த நிறுவன உரிமையாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் அவர் பேசுகையில், “இங்கு ஒரு பேக்கரியில் கிடைக்கும் தேங்காய் பன் மிகவும் சுவையாக இருக்கும். அந்த பன் வெறும் ஒன்றே கால் ரூபாய். அங்கு போகும்போது என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, அதில் எத்தனை பன்கள் வாங்கலாம் என்று எண்ணிக்கொண்டு போவேன்.
ஆனால் அங்கு போனவுடன், டீ மட்டும் குடித்து விட்டு போவோம் என்று நினைப்பேன். என்னுடன் வரும் நண்பன் தேங்காய் பன் சாப்பிடுவான். ‘நீ சாப்பிடலையா?’ என்று கேட்பான். அதற்கு நான், ‘நாம் தினமும் மூன்று வேளை வந்தால் நாலு ரூபாய்க்கு மேல் ஆகிவிடும். வீட்டிற்கு அனுப்ப வேண்டிய பணத்தில் குறைவாகிவிடும், அதனால் வேண்டாம்’ எனச் சொல்வேன். ஆனால் இன்று, அந்த ஊரில் எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு என்றார்.