பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தமிழ் திரைப்படங்களிலும் சிலவற்றில் நடித்த அனுராக் காஷ்யப், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இன்றைய தமிழ் சினிமா இசையைப் பற்றி உரையாற்றிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.

அதில் அவர், “தெலுங்குப் பான் இந்தியா படங்களுடன் போட்டியிட தமிழ்ச் சினிமாவும் விரும்புகிறது. தற்போது தமிழில் உருவாகும் பாடல்களில் கூட ஆங்கில வார்த்தைகள் அதிகம் இடம் பெறுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் ராக் இசைக்குழுக்கள் தமிழுக்கு வந்துவிட்டு, ‘ஐயாம் கமிங் பார் யு, ஐயாம் கன்னிங் பார் யு’ என திடீரென பாட தொடங்குகின்றனர். இது தமிழ் சினிமா இசை அல்ல.
ஒருகாலத்தில் நாங்கள் தமிழ் சினிமா பாடல்களை ஹிந்தியில் உருமாற்றம் செய்து பயன்படுத்தி வந்தோம். அந்த நேரத்தில் ராஜா சார் உட்பட பலர் இசையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால் இப்போது அந்த இசை எனக்கு புரியவில்லை,” என அவர் தெரிவித்தார்.