‘ஏஸ்’ மற்றும் ‘டிரெயின்’ திரைப்படங்களை முடித்த பின்னர், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நாயகியாக நித்யா மேனன் நடிக்க, செம்பியன் வினோத் ஜோஷ், யோகி பாபு, ரோஷினி ஹரிபிரியன், தீபா மற்றும் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக முடிவடைந்தது. தற்போது படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வரும் மே 3ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றி வருகிறார். மேலும், இதன் இசை உரிமையை தின்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.