சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அனு அகர்வால் கூறும்போது, “எனக்கு நடந்த அந்த விபத்திற்கு பிறகு சுயநினைவு திரும்பிய போது என்னை யார் என்றே எனக்கு தெரியவில்லை. அது மட்டுமல்ல என்னை சுற்றி இருந்தவர்களை யார் என்று உணர்வதற்கே எனக்கு நீண்ட நாட்கள் ஆனது. சிகிச்சையில் இருந்தபோது என்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை என்னிடம் காட்டியபோது அதிர்ந்து போனேன். காரணம் விபத்தால் என் முகமே மாறிவிட்டது. அதுமட்டுமல்ல பழைய நினைவுகள் நிறையவே மறந்து போய்விட்டது. நடப்பது, மற்றவர்களுடன் பேசுவது என்பதை எல்லாமே புதிதாக கற்றுக் கொண்டுதான் செயல்பட ஆரம்பித்தேன்.
