Touring Talkies
100% Cinema

Friday, October 3, 2025

Touring Talkies

இயக்குனராக களமிறங்கிய பிரபல பாடகர் எஸ்.பி.சரண்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி. சரண். அவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். பாடகர் மட்டுமல்லாமல், சரோஜா, துரோகி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். மேலும், சென்னை 28, மழை, ஆரண்ய காண்டம் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது எஸ்.பி. சரண் இயக்குநராக களமிறங்கியுள்ளார். அரசியல் கதைகளம் பின்னணியாக அமைந்துள்ள ஒரு கதையை உருவாக்கி வருகிறார். ஆனால், இது திரைப்படமாக அல்ல, வெப் தொடராக தயாராகிறது.

இந்த வெப் தொடருக்கு “அதிகாரம்” என்ற பெயர் வைத்துள்ளனர். இதில் அதுல்யா ரவி, அபிராமி, தேவ், அரவிந்த் ஆகாஷ், ஜான் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த வெப் தொடர் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News