Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? தீயாய் பரவும் புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தை இயக்குநர் கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தயாரிப்பு பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. இது 2018-ம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் வெளியீடு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு, ரிலீஸ் குறித்த எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை.

இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ எப்போது வெளியாகும்? என்று ஆர்வமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இந்தப் படத்தை மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் பரவி வருகிறது.இன்னொரு என்னவென்றால், அதே நாளில் சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News