அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், அனுபமா பரமேஸ்வரன், பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா, வி.ஜே. சித்து, ஹர்ஷத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘டிராகன்’ திரைப்படம் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசு ‘டிராகன்’ படத்திற்கு சிறப்பு காட்சிக்கான அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு, தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும், படம் மொத்தம் 2 மணி 35 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாகியுள்ளது. இப்படம் குறித்து, நடிகர் சிம்பு தனது எக்ஸ் (X) தளத்தில் “டிராகன் – ப்ளாக்பஸ்டர்” என பதிவு செய்துள்ளார். இதற்கு, நடிகர் பிரதீப் ரங்கநாதன், “நீங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் படத்தை பார்த்து பாராட்டியதற்கு நன்றி” என பதிலளித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்திலும், பிரதீப் ரங்கநாதனின் நடிப்பிலும் உருவாகியுள்ள ‘டிராகன்’ முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.