Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

இசையமைக்க சம்பளமா? பாடல் உரிமையா? இசையமைப்பாளர்களுக்கு நிபந்தனை விதித்த மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்படத்தின் தயாரிப்பு செலவுகள் கடுமையாக உயர்ந்ததை தொடர்ந்து முன்னணி நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜூன் மாதம் முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது மலையாள தயாரிப்பாளர் சங்கம்.

தயாரிப்பு செலவினங்களை குறைக்கும் பல திட்டங்களை ஆலோசித்து அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது இசை அமைப்பாளர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது. ஒரு படத்திற்கு இசையமைக்க முழு சம்பளம் பெற்றுக் கொண்டால் அந்த இசையமைப்பாளருக்கு பாடலின் மீதும் மெட்டுக்களின் மீதும் எந்த உரிமையும் கிடையாது. அனைத்தும் தயாரிப்பாளர்களுக்கு சொந்தம். பாடல்கள் மூலம் கிடைக்கும் எல்லா வருவாயும் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் பாடலின் உரிமம் மற்றும் அனைத்து பண பலன்களையும் பெற்றுக் கொண்டு சம்பளம் வாங்காமல் இசையமைக்க வேண்டும். ஒரு படத்திற்கு இசையமைக்க சம்பளமா? பாடல் உரிமையா? என்பதை இசையமைப்பாளர் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இது குறித்து மலையாள இசையமைப்பாளர் அவுசப்பச்சன் கூறும்போது, “இசையமைப்பாளர்களிடம் உரிமம், சம்பளம் இவற்றில் ஒன்றைத்தான் இசை அமைப்பாளர்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என புதிய நிபந்தனையை விதிமுறையாக விதிக்க முடியாது. எல்லா இசையமைப்பாளர்களுக்கும் போதுமான அளவு ஊதியம் கொடுக்கப்படுவது இல்லை. அப்படியே கொடுக்கப்படும் ஊதியம் அந்த படத்தின் மொத்த இசைக்கும் ஒரு காண்ட்ராக்டாக பேசப்பட்டு தான் கொடுக்கப்படுகிறது. அதில் தான் இசையமைப்பாளர்கள் தங்களிடம் பணியாற்றும் இசை கலைஞர்களுக்கான ஊதியம், ஸ்டுடியோ வாடகை உள்ளிட்ட பல செலவுகளையும் செய்ய வேண்டி இருக்கிறது” என்றார்.மலையாள இசையமைப்பாளர்கள் 20 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News