பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பலர் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் சின்னத்திரை நேயர்களின் பெரும் ஆதரவை பெற்ற வீஜே விஷால் இனி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என கேள்விகள் எழும்பியது. இந்நிலையில், வீஜே விஷால் பிரபல இயக்குநரான ரவிக்குமாரை சந்தித்து அவருடன் செல்பி எடுத்துள்ளார். இயக்குநர் ரவிக்குமார் விஷ்னு விஷால் நடித்த ‘இன்று நேற்று நாளை’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், வீஜே விஷால் அவரை சந்தித்திருப்பது அவர் சினிமாவில் அறிமுகமாகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் எழச் செய்துள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158350.jpg)