தமிழ் சினிமாவில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் என மூன்று முக்கியமான தயாரிப்பாளர் சங்கங்கள் உள்ளன. சாதாரணமாக, தயாரிப்பாளர்கள் இதில் ஏதாவது ஒன்றில் உறுப்பினராக சேர்ந்த பிறகுதான் படங்களை தயாரிக்க முடியும்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158393.jpg)
கடந்த சில வருடங்களாகவே, திரைப்பட வெளியீடுகளில் எந்தவிதமான ஒழுங்குமுறையும் இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து படங்கள் வெளியாகின்றன. ஆனால், அவற்றில் பல படங்கள் ஒரு வாரம் வரை கூட தியேட்டர்களில் நீடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதற்கு காரணமாக, சில பெரிய படங்களின் வெளியீடு திடீரென அறிவிக்கப்படுவதும், தள்ளி வைக்கப்படுவதும் காரணமாக மற்ற படங்களின் திரையிடுதலுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெரிய படங்களுக்கு தியேட்டர்கள் முன்னுரிமை கொடுப்பதாலும், சிறிய படங்கள் விரைவில் திரையிலிருந்து நீக்கப்படுகின்றன.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158399.jpg)
மறுநாளாக இருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதி மட்டும் 10 படங்கள் வரையிலும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இத்தனை படங்கள் திரைக்கு வருவதால், தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 1000 தியேட்டர்களில் அவற்றுக்கு திரையிட இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.
படத்தை தயாரிப்பதில் ஏராளமான சிரமங்கள் இருந்தாலும், அவற்றை வெளியிடுவதில்தான் இன்னும் கடுமையான சிக்கல்களை தயாரிப்பாளர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. இது குறித்து பல தயாரிப்பாளர்கள், மூன்று முக்கிய தயாரிப்பாளர் சங்கங்களும் படங்களின் வெளியீட்டுத் தேதிக்காக எந்த ஒரு ஒழுங்குமுறையையும் கொண்டு வராததைப் பற்றி கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்ந்தால், முன்னணி நடிகர்கள் நடிக்காத பிற படங்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்.இதனை தீர்ப்பதற்காக, தயாரிப்பாளர் சங்கங்களோடு வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளும் இணைந்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.