Tuesday, February 11, 2025

கிளாமர் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை சனம் ஷெட்டி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாடல் அழகியான சனம் ஷெட்டி தமிழ் திரையுலகில் “அம்புலி” படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு மலையாளத்தில் “சினிமா கம்பெனி” என்ற படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016ஆம் ஆண்டு “மிஸ் தென்னிந்தியா” பட்டத்தை வென்றுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாக கூறினார். “நாங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் தர்ஷன் பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்” என அவர் மீடியாக்கள் முன்பு குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனம் ஷெட்டி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். கடந்த சில மாதங்களாக, அதிக கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அண்மையில் நீச்சல் குளத்தில் பிகினி அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது, அவர் ஒரு விளம்பரக் காணொளிக்காக கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News