தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் அசோக் செல்வன், தனது 23வது படமாக புதிய ஒரு படத்தில் நடிக்கிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156582-1024x652.png)
இந்தப் படத்தினை, இயக்குனர் விக்னேஷ் ராஜா எழுதிய கதையின் அடிப்படையில், அறிமுக இயக்குனர் கார்த்திக் ராமகிருஷ்ணன் இயக்குகிறார். இதில், ‘ஸ்டார்’ படத்தின் மூலம் பிரபலமான பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடிக்கிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156584-1024x599.png)
‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த அசோக் செல்வனின் சகோதரி அபிநயா செல்வம், தனது ‘ஹேப்பி ஐ’ நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜை நிகழ்வுடன் தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.