ராஜமவுலி, “ஆர் ஆர் ஆர்” படத்திற்குப் பிறகு, தனது புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில், மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள அலுமினியம் தொழிற்சாலையில் நடைபெற்றது, மேலும் அது ஐந்து நாட்கள் நீடித்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளார்
இந்தக் கதையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் மகேஷ்பாபுவின் தந்தையாக இந்த கதையில் தோன்றுகிறார்.இதற்காக டெஸ்ட் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது. இதில் நானா படேகர் மட்டுமல்லாது, இன்னும் சில முக்கிய நடிகர், நடிகைகளின் டெஸ்ட் ஷூட்டிங்கும் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.