Thursday, February 6, 2025

குடும்பஸ்தன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புதிய படத்தில் கமிட்டாகும் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி….

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் மணிகண்டன் நடிப்பில், ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியானது. சினிமாக்காரன் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை, நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார்.மணிகண்டனுடன், சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர். சுந்தரராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.

மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சம்பவங்களை, நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை ரூ.18 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக, இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி பேசியதாவது, குடும்பஸ்தன் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், இவ்வளவு பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு, நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் தொடங்கியபோது, சினிமா உலகிற்குள் நுழைய வேண்டும் என்பதே எங்களது கனவு. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், எங்களிடம் அடுத்த படத்திற்கான கதையும் தயாராக உள்ளது. இதற்கான தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” எனக் கூறினார்.

- Advertisement -

Read more

Local News