நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் வெளியான “புஷ்பா 2” படத்தின் மிகப்பெரிய வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அதேசமயம் தொடர்ந்து படப்பிடிப்புகளிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் கலந்து கொண்ட ராஷ்மிகா, தனது அன்றாட உடற்பயிற்சியை தொடர்வதற்காக ஜிம்மிற்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் சிகிச்சை மேற்கொண்டு சில நாட்கள் ஓய்வு எடுக்கப் பட்டார். தற்போது ராஷ்மிகா வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், “எப்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வேன் என்று ஆவலாக காத்திருக்கிறேன்” என்று அவர் சமூக வலைதளங்களில் கூறியுள்ளார்.