தமிழ் திரைத்துறையில் திறமையான நடிகை என்ற பெயரை பெற்றவர் அஞ்சலி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக டோலிவுட் பாலிவுட் என பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்த ஆண்டு பொங்கல் அஞ்சலிக்கு இரட்டைப் பொங்கலாக அமைந்துள்ளது. தெலுங்கு திரைப்படமான ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரண் ஜோடியாக நடித்துள்ளார். நேற்று வெளியான அந்த படத்தில், மற்றொரு கதாநாயகியான கியாரா அத்வானியை விட அதிக பாராட்டுகளை அஞ்சலி பெற்றுள்ளார்.
தெலுங்கில் அந்தப் படம் வெளியாகியுள்ள நிலையில், தமிழில் அவரது ‘மத கஜ ராஜா’ படம் நாளை வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்திலும் அஞ்சலியே கதாநாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டு மொழிகளில் படங்கள் வெளியாகுவதால் அஞ்சலி மகிழ்ச்சியில் உள்ளார். அதன் பிறகு தமிழில் அவர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் வெளியீட்டிற்குத் தயாராகி உள்ளது.