Wednesday, January 1, 2025

விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகாது..‌. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பட தயாரிப்பு நிறுவனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் “விடாமுயற்சி” திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரத்தில் நிறைவடைந்தது. அடுத்தகட்டமாக, டப்பிங் பணிகளையும் அஜித் முடித்துள்ளார். இதனால், 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போதைய சூழலில், இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வராது என தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. இதுகுறித்து லைகா வெளியிட்ட அறிக்கையில், “அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால், ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளி வைக்க தீர்மானித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News