நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை ஷாலினி முதன்முதலில் ஜோடியாக நடித்த திரைப்படம் “அமர்க்களம்”. இந்த படத்தை இயக்குனர் சரண் இயக்கினார். இதன்போது, படப்பிடிப்பில் இருந்து நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினியிடையே காதல் மலர்ந்தது.
இதன் தொடர்ச்சியாக, 2000ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் அஜித்குமாரும் ஷாலினியும் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதிகளுக்கு அனோஷ்கா எனும் மகளும் ஆத்விக் எனும் மகனும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடிய ஷாலினிக்கு நடிகர் அஜித்குமார் விலையுயர்ந்த காஸ்டமைஸ் செய்யப்பட்ட லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அஜித் அவருடைய மனைவிக்காக வழங்கிய இந்த கார், லெக்சஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த மாடல்களில் ஒன்றாகும். லெக்சஸ் காரின் முன்னிலையில் ஷாலினி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.