ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “தர்பார்” படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், அதைத் தொடர்ந்து விஜய்யுடன் ஒரு படத்தை இயக்கப் போவதாக இருந்தார். ஆனால் கதை தொடர்பான சிக்கல்களின் காரணமாக அந்த படம் ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர், சில ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வந்த ஏ.ஆர். முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனின் 23வது படம் மற்றும் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் “சிக்கந்தர்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த சூழலில், விரைவில் “கஜினி” படத்தின் இரண்டாம் பாகத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது. 2005ஆம் ஆண்டு சூர்யா நடித்த “கஜினி” படத்தை இயக்கிய முருகதாஸ், 2008ஆம் ஆண்டில் அதை ஹிந்தியில் அமீர் கானை வைத்து ரீமேக் செய்தார்.
இப்போதைய நிலவரப்படி, “கஜினி” படத்தின் இரண்டாம் பாகத்தை அமீர் கானை வைத்து ஹிந்தியில் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் “சிக்கந்தர்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், “கஜினி 2” படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.