தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா மற்றும் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களுக்காக பாராட்டப்பட்டவர். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான படம் “தங்கலான்”. விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் நடித்திருந்தனர். இப்படம் அடுத்த மாதம் 6ம் தேதி வடஇந்தியாவில் இந்தியில் வெளியாக இருக்கிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000065594.png)
இந்த நிலையில், பா.ரஞ்சித் சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் இயக்கவிருக்கும் இந்திப் படம் பற்றிய அப்டேட்டை தரும்படி கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் ஒரு இந்திப் படத்துக்காக கையெழுத்திட்டுள்ளேன், அந்த படத்திற்கு ‘பிர்சா முண்டா’ என்று பெயர் வைத்துள்ளோம்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000065592-1024x667.png)
அப்படத்திற்கான திரைக்கதை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த கதையை நானும் எனது நண்பர் ஒருவரும் சேர்ந்து எழுதியுள்ளோம். தற்போது, நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் நாம் அறிவிப்போம், என்று கூறினார். ரன்வீர் சிங் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.