இந்தியாவின் மிகப்பெரிய குற்றவாளியாக தானி ராம் மிட்டல் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மட்டும் இல்லாமல் 2 ஆயிரம் குற்றவாளிகளையும் விடுதலை செய்த நீதிபதி என்றும் அறியப்பட்டார். தானி ராம் மிட்டல், இந்தியாவின் மிக மோசமான மோசடி கில்லாடியாக கருதப்படுகிறார். இவர் ஹரியானா மாநிலம் ரோடக் பகுதியைச் சேர்ந்தவர், 1960ம் ஆண்டு அங்கு உள்ள நீதிமன்றத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். நீதிபதி விடுமுறையில் இருந்தபோது, 2 மாதங்களுக்கு நீதிபதியாக நடித்து ஏராளமான குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியவர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000064323.png)
டில்லி, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களைத் திருடியுள்ளார். பகலில் திருடுவது இவருடைய தனிச்சிறப்பு. போலி ஆவணங்கள் மூலம் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராகவும் பணியாற்றியுள்ளார். தன்னுடைய வழக்குகளில் தானே வாதாடியிருக்கிறார். இவ்வாறு பிரபலமான தானி ராம் மிட்டல், கடந்த ஏப்ரல் மாதம் காலமானார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000064326-1024x576.png)
அவருடைய வாழ்க்கைக் கதையை ‘மனிராம்’ என்ற பெயரில் பிரீத்தி அகர்வால் மற்றும் சேதன் உன்னியல் ஆகியோர் புத்தகமாக எழுதியுள்ளனர். இந்த புத்தகத்தின் அடிப்படையில் தானிராம் மிட்டலின் வாழ்க்கை கதையை சினிமாவாக உருவாக்கவுள்ளனர். இந்தப் படத்தை ‘குரூப்’ படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்குகிறார். இந்தியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட மற்ற மொழிகளிலும் வெளியீடு பெறவுள்ளது. இதில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.