நடிகை திவ்யா துரைசாமி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்த வாழை படம் வெளியாகி, மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
வாழை படம் ரசிகர்களை மிகுந்த அளவில் கவர்ந்த நிலையில், திவ்யா துரைசாமி நடித்த வேம்பு கேரக்டர் பெரிதும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின், திவ்யா துரைசாமியை நேரில் சந்தித்து, அவரின் நடிப்புக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தார். மிஷ்கின், திவ்யா துரைசாமி தமிழ் சினிமாவின் சிறந்த படத்தில் நடித்திருப்பதாகவும், படத்தில் திவ்யா, சிறுவன் மற்றும் கலையரசன் ஆகியோரின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், எதிர்காலத்தில் திவ்யாவுடன் பணியாற்றுவேன் என்றும் பாராட்டினார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000064282-819x1024.jpg)
இந்நிலையில், திவ்யா துரைசாமி வாழை படத்திற்கு ஆறு மாதங்கள் யாருடனும் பேசாமல் மௌனம் காத்ததாக பேட்டியில் கூறியுள்ளார். தானும் எப்பொழுதுமே அனைவருடனும் சிரமமின்றி பேசும் குணம் உடையவளாக இருப்பதைக் குறிப்பிட்டு, இந்த கேரக்டரில் அது வெளிப்படாமல் இருக்கத்தான் அதிகமாக பேசாமல் தன்னுடைய பேச்சை குறைத்துக் கொண்டதாகவும், மேலும் தன்னுடைய பார்வையையும் மாற்றிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய கண்களில் அன்பு மற்றும் கருணையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக பார்வையை மாற்றியதாக திவ்யா கூறியுள்ளார்.