Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சின்னத்திரை டூ வெள்ளித்திரை.‌‌.. நடிகர் பிரஜினின் ‘ராஞ்சா’ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜேவாக பணிப்புரிந்து பின் சின்னத்திரையில் அறிமுகமாகி தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் பிரஜின். 2006 ஆம் ஆண்டு முதல் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை எனும் படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். கடந்த ஆண்டு டி3, அக்கு போன்ற படங்களில் நடித்தார்.

தற்பொழுது ராஞ்சா எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவானா வருண் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் முடிந்தது. படத்தை அறிமுக இயக்குனரான சந்தோஷ் ராவணன் இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. மோஷன் போஸ்டரை பிரபல மலையாள நடிகர்களான நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பசிவன் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் மற்றும் சிவி குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹரி எஸ் ஆர் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News