தமிழ் சினிமாவில் பலருக்கும் இவரை வில்லனாக தான் அடையாளம் தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குனர். தாலாட்டு கேட்குதம்மா என்ற படத்தின் மூலம் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ராஜ் கபூர் நடிகர் அஜித் குமாரை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட பல படங்களை இயக்கி இயக்குனராக பிரபலமானார்.
அண்மையில் உழைப்பாளர் தினம் எனும் ஒரு புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ் கபூர், கதைக்கும் டைட்டிலுக்கும் ஒரு சம்பந்தமே இல்லாம கில்லின்னு பேர் வைக்கிறானுங்க என்றார்.இந்த படத்துக்கு தான் சரியாக உழைப்பாளர் தினம்னு பெயர் வச்சுருக்காங்க என்றார்.
இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் போன்ற நல்ல பெரிய இயக்குநர்களை பெரிய நடிகர்கள் அழைத்து படம் கொடுக்கிறேன்னு சொல்லி காலி பண்ணிடுறாங்க என பேச அந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பரியேறும் பெருமாள் எனும் நல்ல படத்தைக் கொடுத்த மாரி செல்வராஜ் அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார்.
அதோபோல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாரி செல்வராஜ்க்கு வெற்றியை தேடிதந்தது.இச்சமயத்தில் மாரி செல்வராஜை எந்த நடிகர் அழைத்துச் சென்று காலி செய்தார் என ரசிகர்கள் ராஜ் கபூருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.