Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

த்ரிஷா இல்லனா ஸ்ரீலீலா… கோட் படத்தில் வெங்கட் வைத்த ட்விஸ்ட்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தி கோட் திரைப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தபோது ரம்ஜான் பண்டிகைக்கு இப்படத்தை திரைக்கு கொண்டுவர வெங்கட் பிரபு பிளான் செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அன்று தான் படத்தின் அறிவிப்பு வெளியானது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீசாக உள்ளது தி கோட் திரைப்படம். எனவே ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோட் படத்தின் ஷூட்டிங் கடைசியாக கேரளாவில் நடைபெற்றது அதுதான் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் என்று சொல்லப்பட்டது ஆனால் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்துவருகிறது.தி கோட் படத்திற்கான சிஜி பணிகள் அதிகம் இருப்பதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார்.கோட் ரிலீஸுக்கு நான்கு மாதங்களே உள்ள நிலையில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் கவனம் செலுத்த தயாராகி வருகிறார் வெங்கட் பிரபு.

எதிர்பார்ப்புகள் கொட்டிக்கிடக்கும் இந்தப் படத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி.புதிய கீதை படத்திற்குப் பின்னர் பல வருடங்களுக்கு பிறகு கோட் படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர். இப்படி எதிர்பார்ப்போடு இருந்த போதுதான் கடந்த 14ஆம் தேதி படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு வெளியானது ஆனால் ஏனோ அப்பாடல் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை.முதல் பந்தில் ரன் எடுக்காவிட்டாலும் அடுத்தடுத்த பந்துகள் சிக்ஸர் பறக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்த பாடல்களுக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இப்படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா தோன்றுவார் என தகவல்கள் பரவின‌ ஆனால் தற்போது அதைப்பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷாவுக்கு பதில் தெலுங்கில் இப்போது ட்ரெண்ட் லிஸ்டில் இருக்கும் ஸ்ரீலீலாவை ஆட வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

- Advertisement -

Read more

Local News