அட சில படத்தோட தலைப்பு ஈர்க்குற விதமா இருக்கும்.அதே மாதிரியான தலைப்போட சீக்கிரம் வெளிவர இருக்குற படம் தான் இடி மின்னல் காதல். ஈர்க்குற விதமா இருக்குற இந்த படத்த பத்தி இந்த படத்தை இயக்குன அறிமுக இத இயக்குனரா இருக்குற பாலாஜி மாதவன் பல தகவல்களை பகிர்ந்துகிட்டாரு. வாங்க அத பத்தி பாப்போம்.
ஒரு இடத்துல ஒரு கார் விபத்து நடக்குது அதை சுத்தி நடக்குற சம்பவம் எல்லாமும் தான் படத்தோட கதையா இருக்கு.இந்த கதையோட மையமா ஆறு கேரக்டர் இருக்கும். அந்த ஆறு பேருமே இந்த விபத்துனால பாதிக்கப்பட்டவங்களா இருப்பாங்க ஏதோ ஒரு விதத்துல. இந்த ஆறு பேர சுத்தி தான் கதை ஓடும். ஒரு வாரத்துல நடக்குற கதைதான் இந்த இடி மின்னல் காதல் படம். நவம்பர் 7ஆம் தேதி ஆரம்பிக்கிற கதை 14ஆம் தேதி முடியுது ஆனால் அப்படி தேதி படியே கத போகாது என்றார்.
எல்லாருக்கும் நல்லாவே தெரிஞ்சா பிக் பாஸ் சிபி, அப்புறம் ஜோ படத்துல நடிச்சிருந்த பவ்யா த்ரிகா, ஆரண்ய காண்டம் யாஸ்மின், பாலாஜி சக்திவேல், ராதா ரவி, ஜெகன் இந்த ஆறு பேரும் தான் அந்த ஆறு விதமான கேரக்டர். சிபி இந்த படத்துல ஹீரோவா நடிச்சிருக்காரு ஆனா அவர் என்னவா நடிச்சிருக்காரு அப்டின்றது தான் இந்த படத்துல இருக்குற சஸ்பென்ஸ்.
இவருக்கு அப்புறம் பவ்யா ஆர்கிடெக் அப்படி என்ற கேரக்டர்லயும், பல வருடங்களுக்கு அப்புறம் ஆரண்ய காண்டம்ல நடிச்சிருந்த யாஸ்மின் நடிச்சு இருக்காங்க, அவங்களுக்கு இது இரண்டாவது படம். இவங்க ஹீரோவோட பக்கத்து வீட்டுக்காரராவும், ஹெட் கான்ஸ்டபிளா பாலாஜி சக்திவேல், சர்ச் பாதராக ராதாரவி, ஜெகன் வந்து மெக்கானிக்காகவும், கயல் படத்தில நடிச்ச வின்சென்ட் தான் இந்த படத்தோட வில்லன் ரோல். இவங்க கூட ஒரு குட்டி பையனும் நடிச்சிருக்கான் அவன் பெயர் தான் ஆதித்யா.
இந்த கதையில பார்த்தீங்க அப்படின்னா சென்னையில் தான் முழுசா இந்த கதை நடக்குது. வல்லநாடு மலையிலிருந்து வில்லன் குரூப் ஒன்னு சென்னைக்கு வராங்க.சென்னையில போர் நினைவுச்சின்னம் இருக்கிற இடம் தான் முக்கியமான ஸ்பாட்டா இந்த கதையில இருக்கும். அந்த ரவுண்டானால தான் கார் விபத்து நடக்குது இதுவரைக்கும் எந்த படத்தோட ஷூட்டிங்ம் இந்த இடத்துல நடந்தது இல்ல ஆனா நாங்க இராணுவத்துகிட்ட எந்த அளவுக்கு விதத்தில இந்த கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் விளக்குனதுக்கு அப்புறம் தான் ராணுவம் அனுமதி கொடுத்தாங்க….
சுவாரசியமா இருக்கிற விஷயம் இந்த படத்துல என்னன்னா, ஆறு கேரக்டருமே ஆடியன்சை ஈசியா எமோஷன்ஸ கனெக்ட் பண்ணிடுவாங்க. எல்லாமே ஒன்னோடு ஒன்னு சேருரப்ப இது ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் மாதிரி இருக்கும் அதனால தான் இந்த படத்துக்கு இடி மின்னல் காதல் டைட்டில். ஆண் பெண் காதல் அப்படினு மட்டும் இல்லாம ஒட்டுமொத்தமா மனுஷங்க மேல இருக்கிற காதலை சொல்லி இருப்போம் மனிதநேயத்தை பத்தி கண்டிப்பா இந்த படம் பேசும் உணர்த்துர விதமாக இருக்கும் என தெரிவித்தார் .
அவரின் திரைப்பயணத்தை பற்றி கேட்டபோது, நான் இயக்குனர் மிஷ்கின் கிட்ட தான் முதன் முதலில் சேர்ந்து அவரோட 4 வருஷம் வர்க் பண்ணேன். அப்புறம் கோ டைரக்டரா ‘ரிச்சி’ அப்டின்ற படத்துல வொர்க் பண்ண அதுக்கப்புறம் சாய்பல்லவி நடிச்ச ‘கார்கி’ படத்துல ஸ்கிரிப்ட் ரைட்டிங் டீம் ஓட வேல செஞ்சேன் .அது மட்டும் இல்லாம மாதவன் சார் ஓட ராக்கெட் படத்துல அசோசியேட் டைரக்டர் வொர்க் பண்ணி தமிழ் இங்கிலீஷ் வெர்சனுக்கு இன்சார்ஜ் நான் இருந்தேன். இப்போ இயக்குனரா ஆக கரெக்ட்டான சந்தர்ப்பம் கிடச்சது நானும் கேமரா மேன் ஜெயச்சந்திரன் சேர்ந்து தான் இந்த இடி மின்னல் காதல் படத்தை தயாரிச்சிருக்கோம் என்று பகிர்ந்து கொண்டார் இயக்குனர் பாலாஜி மாதவன்.