Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

மும்பையில் குடிபெயர்ந்தது குறித்து ஜோதிகா விளக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஜோதிகா குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிடார் என பல விமர்சனங்கள் எழுந்தது.  இது குறித்து பேசிய ஜோதிகா தற்காலிகமாக மும்பைக்கு குடிபெயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனா சமயத்தில்  அம்மா – அப்பாவுக்கு 2, 3 முறை கோவிட் வந்தது. அப்போது விமான சேவை இல்லாததால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் யோசித்தேன். 25 வயதிலிருந்து நான் சென்னையில்தான் இருக்கிறேன். மும்பை அம்மா வீடு என்றால் சென்னை எனக்கு அப்பா வீடு மாதிரி இரண்டையும் பிரிக்க முடியாது.

திருமணத்துக்குப் பின் பெண்கள் தங்கள் பெற்றோர்களை கவனித்துக்கொள்ள முடிவதில்லை. அதன் பிறகு பொறுப்புகள் கூடிவிடுவதால் பெற்றோர்களுடன் நேரம் செலவழிப்பது குறைந்துவிடுகிறது.

சிறிது நாள் அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதால் மும்பைக்கு மாறினேன். இது ஒரு தற்காலிக முடிவுதான். குழந்தைகளுக்கும் பள்ளி செல்ல வசதியாக உள்ளது. சூர்யா எப்போதும் சப்போர்டாக இருப்பார் என ஜோதிகா கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News