Wednesday, September 18, 2024

ரூ.1000 கோடியை  நெருங்கும் ’அனிமல்’ பட வசூல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரன்பீர் கபூர் வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படம்  டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் வெளியாகி 16 நாட்களில் ரூ.817.36 கோடி வசூலித்துள்ளது. வார இறுதி நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

ஆகவே ஒரு சில நாட்களில் அனிமல் படம் ரூ.1000 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News