ஆந்திராவை சேர்ந்த பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர். ‘நாளை நமதே’ படத்தில் எம்ஜிஆருக்கு தம்பியாக நடித்தவர். பிலிம் பேர் விருது, நந்தி விருது ஆகிய விருதகளை பெற்றவர். கிட்டதட்ட 942 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர்.
1975ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படம் ‘நாளை நமதே’. இப்படத்தில் அவருக்கு நடித்தவர் தெலுங்கு நடிகர் சந்திரமோகன். 1966ஆம் ஆண்டு வெளியான ‘ரங்குல ரத்னம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத்தின் உறவினர் ஆவார். தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் சந்திரமோகன்.
வயது மூப்பின் காரணமாக இதய நோய்க்கு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது இறுதிச் சடங்கு திங்கள் கிழமை நவ.13 நடைபெற உள்ளது.