சினிமாவில் பிரபல இயக்குனர்களில் பி.வாசு, மணிவண்ணன், ராஜசேகர் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் நந்தகுமார்.
ஜாம்பவான், தென்னவன், போன்ற பல படங்களை இயக்கியவர். தனது திரைப்பட அனுபவங்கள் குறித்தும் தான் இயக்கிய முதல் திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்டார்.எனது முதல் படம் கோடீஸ்வரன் இந்த திரைப்படத்தில் ஜோதிகாவை தேர்வு செய்தோம். ஆனால் அதை தவறவிட்டு விட்டேன் என டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் நந்தகுமார் பகிர்ந்து கொண்டார்.