டாக்ஸி ஓட்டுநராக வருகிறார் நாயகன் விக்ரம் ரமேஷ். இவர், நாயகி சுவயம் சித்தாவை ஒரு பாரில் இருந்து பிக்கப் செய்கிறார். இருவருக்கும் நட்பு மலர்கிறது. இந்த நிலையில் ஒரு நாள், சுவயம் சித்தா வீட்டில் இருவரும் மது அருந்திவிட்டு மயக்கமாகி விடுகின்றனர்.
நள்ளிரவில் கழித்து கண் விழிக்கும் விக்ரம் கழிவறை செல்ல முற்படும் நேரத்தில் ஓர் அறையில் ஒரு பிணம் இருப்பதைக் கண்டு அதிர்கிறார்.
அங்கிருந்து அவர் தப்பிக்க முயற்சி செய்யும் நேரத்தில் சுயம் சித்தா அங்கு வந்து விடுகிறார். சுயம் சித்தா தடுக்கிறார். இருவருக்கும் இடையே தள்ளும் முள்ளுவில் சுயம் சித்தா இறந்து விடுகிறார்.
அந்த பங்களாவில் இருக்கும் கதவுகளுக்கு பாஸ்வேர்டு லாக் போட்டு இருப்பதால் விக்ரம் தப்பிக்க முடியவில்லை. அவர் தப்பிக்க திண்டாடும் நேரத்தில் அங்கு திருடன் கார்த்திக் வீட்டினுள் திருட வருகிறார். அதேபோல் அரசியல்வாதி மஸ்தான் பாயும் அந்த வீட்டிற்குள் ஒரு பணப்பெட்டியுடன் நுழைகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை!
விக்ரம், கார்த்தி, மஸ்தான் பாய் என அனைவரும் இயல்பாக நடித்து உள்ளனர்.
சுயம் சித்தா கொஞ்ச நேரமே வந்தாலும் கவர்ச்சியும் நடிப்பிலும் மனதில் பதிகிறார்.
ஆர்ட் டைரக்டர் சூர்யாவின் கலை இயக்கம் சிறப்பு. ஒரு ஸ்மார்ட் பங்களாவை கண்முன் நிறுத்தி இருக்கிறார்.
ஒரு பங்களாவுக்குள்ளேயே முழு படமும் எடுக்கப்பட்டு இருந்தாலும் அயர்ச்சி ஏற்படாதபடி சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தளபதி ரத்தினம். கலா சரண்ன் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. விறுவிறுப்பான படத்தொகுப்புக்காக முகன் வேலுவும் கவனம் பெறுகிறார்.
நாயகன் விக்ரம் ரமேஷ் தை கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். சிறிய கதையை கொண்டு இரண்டு மணி நேர சுவாரஸ்ய படமாக அளித்து உள்ளார்.
முற்றிலும் புது முகங்கள் நடித்து வெளியாகி உள்ள ‘எனக்கு என்டே கிடையாது’ திரைப்படத்தை பார்த்து ரசிக்கலாம்.