Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

தொடங்கியது பிக்பாஸ் 7:  2வது வீட்டிற்கு செல்பவர்கள் இவர்கள் தான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7வது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுபுது அப்டேட்கள் மூலம் “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என ரசிகர்களை எப்படியாவது கட்டிப்போட்டுவிடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியுள்ளது.

இந்த சீசனில் இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, பிரதீப் ஆண்டனி, வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷூ, விஷ்ணுவிஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, சரவண விக்ரம், யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லத்துரை, விஜய் வர்மா, அனன்யா ராவ், நிக்ஸன் உள்ளிட்ட 18 பேர் இந்த பிக் பாஸ் 7-ல் களமிறங்கியுள்ளனர்.

முன்னதாகவே கமல்ஹாசன் பல புரோமோக்களில் இந்த சீசனில் புதிதாக 2 வீடு என்று அறிவித்திருந்தார். அதன் படி மொத்தமாக 18 பேரும் நேற்று ஒரே வீட்டிற்குள் சென்ற நிலையில், இந்த வாரம் 2வது வீட்டிற்குள் செல்லவுள்ள 6 போட்டியாளர்களின் விவரத்தை விஜய் தொலைக்காட்சி புரோமோவாக வெளியிட்டுள்ளது.

இந்த வார தலைவராக நேற்று விஜய் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் வினுஷா, ஐஷு, பவா செல்லத்துரை, அனன்யா ராவ், ரவீனா, நிக்ஸன் ஆகிய 6 பேரும் வேறுவழியாக 2வது வீட்டிற்குள் செல்கின்றனர். இவர்கள் 6 பேரும் அடுத்த அறிவிப்பு வரும்வரை வெளியே வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோ தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

- Advertisement -

Read more

Local News