Wednesday, November 20, 2024

சிநேகாவால் பாண்டிராஜை அசிக்கப்படுத்திய சேரன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “சேரனிடம், ‘பாண்டவர் பூமி’ படத்தில் துணை இயக்குநராகப் பணியில் சேர்ந்தேன். அவரிடம் வேலை செய்தால் சம்பளம்கூட கிடைக்காது. ஆனாலும் திரைப்பட அனுபவம் கிடைக்கும் என்பதற்காக சேர்ந்தேன். அவரது ‘ஆட்டோகிராப்’ படத்திலும் துணை இயக்குநராகப் பணியாற்றினேன்.

சேரன் மிகவும் அன்பான மனிதர். ஆனால், கோபம் வந்துவிட்டால் அருகில் யார் இருக்கிறார்கள்… இல்லை என்றெல்லாம் பார்க்க மாட்டார். திட்டி தீர்த்து விடுவார். அது அவர் சுபாவம்.

இப்படித்தான் ஒரு முறை என்னை திட்டித் தீர்த்துவிட்டார். அதனால் டென்சனில் இருந்த நான், படக் குழுவில் இருந்த டிரைவர் ஒருவரிடம் கோபத்தைக் கொட்டிவிட்டேன்.

அவர், சிநேகாவின் கார் டிரைவர். நான் சொல்லாததையும் சேர்த்து, சினேகாவிடம் கூறியிருக்கிறார். சினேகாவும் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளாமல், அந்த டிரைவர் சொன்னதை அப்படியே சேரனிடம் சொல்லிவிட்டார். சேரனும் விசாரிக்காமல், 200 பேர் கூடி இருந்த இடத்தில் என்ன கடுமாகப் பேசிவிட்டார். அத்தனை அசிங்கமான வார்த்தைகள்.

இதனால் அவமானப்பட்ட நான், தன்மானத்தை இழந்து இனி இங்கு வேலை செய்ய வேண்டாம் என எண்ணி சேரனிடமிருந்து விலகினேன்” என்று இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார்.

அவரது வாழ்க்கையில் நடந்த மேலும் பல சுவாரஸ்யமான சம்பவங்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=wNY3C0CEkfY

- Advertisement -

Read more

Local News