கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில், விக்ரம் ரமேஷ் இயக்கியுள்ள படம் , ‘எனக்கு என்டே கிடையாது’. இருவரும் முதன்மை கதாபாத்திரத்திலும் தோன்றுகின்றனர்.
கதாநாயகியாக ஸ்வயம் சித்தா தோன்றுகிறார். இப்படத்தின் விழா, இன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால், நாயகி, ஸ்வயம் சித்தா மட்டும் கலந்துகொள்ளவில்லை.இது குறித்து விசாரித்தபோது, ‘நான் இப்போது பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறேன். ஆகவே இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாது’ என்று சொல்லிவிட்டாராம்.
நன்றி மறந்த உலகம் என்பது இதைத்தான் போலும்!