Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விமர்சனம்: டீமன் 

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமாவில் இணை இயக்குநராக இருக்கும் சச்சின் பேய் கதை ஒன்றை உருவாக்குகிறார்.  ஸ்கிரிப்ட் தயார் செய்யவதற்காக தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்குகிறார். அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க, அடுத்தடுத்து அவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே `டீமன்’ படத்தின் கதை.

நாயகன் சச்சின் சிறப்பாக நடித்து இருக்கிறார். பயம், குழப்பம், அதிர்ச்சி என பல்வேறு மனநிலையை முகத்தில் வெளிப்படுத்துகிறார்.  நாயகி அபர்ணதியின் பாடல்களுக்கு வந்து போகிறார்.

கும்கி அஷ்வின் உள்ளிட்ட இதரர்கள் நடிப்பு செயற்கை.

ஆரம்பமே தனியாக பங்களா, இருட்டு, அதிரடி இசை, மர்ம உருவம் என வழக்கமானதாக இருந்தாலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் அதே காட்சிகள். அவை எல்லாமே கனவு என காண்பிப்பது. அயர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.

கண்ணாடியில் நாயகனின் உருவம் வயோதிகம் அடைந்தது போன்று தோன்றுகிறது. இதனால் பயந்து ஓடுகிறார்.. அலறுகிறார். மனநல மருத்துவரைப் பார்க்கிறார். ஆனால் தனது நண்பர்களிடம் சொல்லவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

பேய் படத்தில் லாஜிக் தேவையில்லை.. ஆனால் குறைந்தபட்ச நம்பகத்தன்மை – சுவாரஸ்யம் வேண்டாமா..

 

- Advertisement -

Read more

Local News