பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷை திருமணம் செய்து பிரிந்தார். பின்னர் ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே, ஆதில் கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் மும்பை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதில் கானை கைது செய்தனர். மைசூர் சிறையில் அடைக்கப்பட்ட ஆதில் கான், சில நாட்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆதில் கான் துரானி, ராக்கி சாவந்த் மீது அடுக்கடுக்கான பல புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
” ராக்கி சாவந்த் முதல் கணவர் ரித்தேசிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக என்னிடம் கூறிவிட்டு தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தார். நான் அவரை தாக்கியதாக ராக்கி கூறுகிறார். ஆனால் அவர் தான் என்னை பல முறை தாக்கியுள்ளார். எனக்கு போதை மருந்து கொடுத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வருகிறார்” என்றார்.
இந்த நிலையில் ஆதிலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டி அளித்துள்ள ராக்கி சாவந்த், “எனது நிர்வாண வீடியோக்களை துபாயில் ரூ.47 லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளார். அப்போதும் நான் அமைதியாக இருந்தேன். அவர் என்னை வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தார்” என்று புகார் தெரிவித்து உள்ளார்.