Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

நாங்குநேரி கொடூரம்: திரையுலகினர் கண்டனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாங்குநேரியில் சாதி மோதலால், பள்ளியில் படிக்கும் அண்ணன், தங்கை இருவர் மீதும் சக மாணவர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என பதிவிட்டுள்ளார்.

மாரிசெல்வராஜ், “கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான ரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகச்சொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என பதிவிட்டுள்ளார்.

மோகன்.ஜி, “மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் பல திரையுலகப்புள்ளிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News