டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்:
“ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருககிறது. அஜித் நடிக்க வேண்டிய காட்சி.
அந்த பிலிம் சிட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ டிவி தொலைக்காட்சியின் வீடியோ கிராபர் அனுமதி இல்லாமல் உள்ளே வந்துவிட்டார். தவிர வீடியோவில் படம் பிடிக்கவும் துவங்கினார்.
இதைப் பார்த்து டென்சன் ஆன அஜித், அந்த வீடியோகிராபரை வெளியே போகச் சொன்னார். அதற்கு அந்த வீடியோகிராபர், “இந்த பிலிம் சிட்டி நிறுவனம் நடத்தும் டிவியைச் சேர்ந்தவன் நான்” என திமிராகச் சொன்னார்.
உடனே அஜித், “நீ பிலிம் சிட்டியின் ஓனராகவே இரு. ஆனால் இப்போது நாங்கள் வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு நடத்துகிறோம். எங்கள் அனுமதி இல்லாமல் வரக்கூடாது. வெளியே போ” என விரட்டிவிட்டார்.
அஜித் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர். யாருக்காவது பிரச்சினை என்றால் ஓடிப்போய் உதவி செய்பவர். அதே நேரம் தன்மானம் மிக்கவர். அதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி” என்றார் கே.எஸ். ரவிகுமார்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..