Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

பீட்சா 3 விமர்சனம்  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திருக் குமரன் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் மோகன் கோவிந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள பேய்ப்படம் பீட்சா -3. உணவகம் வைத்து நடத்தும் நளனுக்கு (அஸ்வின் ) அமானுஷ்யமான சில விஷங்கள் ஏற்படுகிறது.  தொடர்ந்து கொலைகள் நடக்க இந்த கொலைகள் மீதான குற்றம் நளன் மீது விழுகிறது.  உண்மையில் கொலை செய்ததது யார், ஏன் என்ற கேள்விகளுக்கான விடைதான் கதை.

பேய்ப்படங்களுக்கான காட்சிகள் இதிலும் உண்டு.
அவ்வப்போது அணைந்து எரியும் விளக்குகள், வெள்ளை உடையில் தலைவிரிகோலமாக வரும் பேய்கள், ரத்தம் தேய்ந்த முகங்கள், இருட்டில் தெரியும் பேய்  விளக்கு எரிந்தவுடன் மறைவது, கண்ணாடியில் மட்டும் தெரியும் பேய்.. இப்படி.

ஆனாலும் பயமுறுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் ஒளிப்பதிவு  சிறப்பாக உள்ளது.படத்தின் இசையும் படத்துக்கு பலம்.

நடிப்பைப் பொறுத்தவரை, அஸ்வின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி நடிப்பு திறமையை காட்டியுள்ளார். கோபம், காதல், சோகம் என நுண்ணிய உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தி உள்ளார். அனுபமா ஒரு தாயாக  சிறப்பான  நடிப்பை தந்துள்ளார்.

சிறுமிகளிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபடுபவர்களில் பலர் அந்த சிறுமிகளுக்கும், சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற சமூகம் சார்ந்த பிரச்சனையை பீட்சா 3 கதையாக அளித்துள்ளது பாராட்டத்தக்கது.

 

- Advertisement -

Read more

Local News