தற்போது பிரபல நடிகராக வலம் வரும் மாரிமுத்து, இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். அதற்கு முன்பு நடிகர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக இருந்தார். அப்போது நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்:ரோஜா படத்தை பார்த்துவிட்டு மாரிமுத்து அந்தப் படத்தில் அமைந்த இசையை பற்றியும் ஏ.ஆர்.ரகுமான் பற்றியும் நாள்முழுக்க பேசிக் கொண்டிருந்தாராம். இதை மாரிமுத்துவுடன் இருந்த சில பேர் ராஜ்கிரணிடம் போய் சொல்லியிருக்கிறார்கள். இளையராஜாவுடன் இருந்து கொண்டு ரஹ்மானை பற்றி பெருமையாக பேசுகிறாயா என்று, மாரிமுத்துவை அவர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி விட்டாராம் ராஜ்கிரண்.
ராஜ்கிரணுக்கு இளையராஜா மீது அவ்வளவு பக்தி!