Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

15 வயதில் நடந்த கொடூரம்!:  நடிகை அதிர்ச்சி தகவல் 

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் நடிகை ரேகாவின் சுயசரிதை புத்தகம், ‘ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது. யாசிர் உஸ்மான்  என்பவர் எழுதியுள்ள  இந்த புத்தகத்தில், பல விசயங்களை நடிகை ரேகா பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.

அதில் ஒன்று, மிகவும் வேதனையானது.

“என்னுடைய பதினைந்தாவது வயதில், அஞ்சனா சபர் படத்தில் பெங்காலி நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனேன்.  படத்தின் இயக்குனர் ராஜா நவாதே.

ஒரு காட்சியின் போது, இயக்குநர் ஆக்ஷன் சொன்னதும் நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜி சட்டென என் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுக்க ஆரம்பித்தார். இயக்குனர் கட் சொல்லாததால் 5 நிமிடங்கள் எனக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்.உடலும் மனதும் நரக வேதனையை அளித்த தருணம் அது. அப்போது நான் அழுது கண்ணீர் சிந்தினேன். அதைக் கூட கவனிக்காமல் படக்குழுவினர் கேமராவுக்கு பின்னால் இருந்துகொண்டு கை தட்டியும், விசில் அடித்தும் சிரித்தனர். இப்படி ஒரு காட்சி எடுக்கபோவதாக இயக்குனர் ரேகாவிடம் சொல்லவே இல்லை” என்று கூறியிருக்கிறார் ரேகா.

“இது போன்ற அனுபவங்கள்தான், பின்னாட்களில் அவர் மிகக் கவர்ச்சியாக நடிக்க காரணமாகிவிட்டனவோ” என நெட்டிசன்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

- Advertisement -

Read more

Local News