நடிகர் ரஜினிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா ரெட்டி, “ரஜினி எனக்கு இன்னொரு அப்பா போன்றவர்” என நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் ரஜினியின் தீவிர ரசிகை. அவரது படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவேன். அப்படி சின்ன வயதில் பார்த்த படம்தான் படையப்பா. அதில் வரும் நீலாம்பரி கதாபாத்திரம் போல ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டேன். அதற்கேற்ற மாதிரி அமைந்ததுதான், திமிரு படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரம்.ரஜினியை சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவள் நான். போயஸ் கார்டனில் சின்ன வயதில் இருந்தே அனைவருடன் சேர்ந்து விளையாடி இருக்கிறேன். அவர் என்னைப் பார்த்து ‘நடிகை தபு மாதிரியே இருக்கிறாய்’ என்று சொல்லுவார். அவர் எனக்கு இன்னொரு அப்பா “ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் ஸ்ரேயா ரெட்டி.