Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“இருட்டு அறை.. மயக்க மருந்து…!”: நடிகையின் நிஜ திகல் அனுபவம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டில் சினிமா நடிகைகளுக்கு இணையாக அங்குள்ள தொலைக்காட்சி நடிகைகளுக்கும் அதிகளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் ‘அக்லே ஜனம் மோஹே பிடியா ஹி கிஜோ‘ மற்றும் ‘ராதா கி பேட்டியான்‘ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரத்தன் ராஜ்புத். இவர் நடிப்புக்காக வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தபோது பிரபல இயக்குநர் ஒருவர் ஆடிஷன் நடத்தியதாகவும் அந்த ஆடிஷனுக்கு தனது நண்பர் ஒருவருடன் சென்றிருந்ததாகவும் கூறினார்.

ஆனால் ஆடிஷன் முடிந்தவுடன் மீண்டும் ஒரு ஸ்கிரிப்பை கையில் கொடுத்து உணவகத்திற்கு அழைத்து சென்றபோது சிலர் குளிர்பானங்களைக் கொடுத்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தினர். அதனால் நானும் எனது நண்பரும் அந்த குளிர்பானத்தை குடித்துவிட்டோம். இதையடுத்து மீண்டும் உங்களை ஆடிஷனுக்கு கூப்பிடுவார்கள் என்று சொல்லியிருந்தனர்.

ஆனால் உடனே மயக்கம் வருவதை போல உணர்ந்த நாங்கள் வீட்டிற்கு வந்துவிட்டோம். இதையடுத்து அடுத்த 40 நிமிடங்களில் மீண்டும் ஆடிஷனுக்கு வரும்படி ஒரு தொலைபேசி வந்தது. இந்த இடத்தில், ஏற்கனவே குளிர்பானத்தில் ஏதோ கலந்திருப்பார்களோ? என்ற சந்தேகம் வந்ததே? எதற்காக மீண்டும் ஆடிஷனுக்கு சென்றீர்கள் என்ற கேள்வி வரலாம். ஆனால் வாய்பை தவற விட்டுவிடுமோ? என்ற பயத்தினாலேயே எனது இரு நண்பர்களுடன் மீண்டும் வேறொரு இடத்திற்கு ஆடிஷனுக்கு சென்றோம்.

ஆனால் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. எங்கு பார்த்தாலும் இருட்டு, துணிகள் அங்கங்கே இரைந்து கிடந்தன. அங்கு ஒரு பெண் மயக்கத்தில் கிடந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே அங்கு ஒரு குரல் அவள் வேறொருவருடன் வந்துள்ளாள்… என்ற குரல் என்னைப் பார்த்து கத்தியது. இதனால் பயந்துகொண்டே மன்னிக்கவும் என்று சொல்லிவட்டு ஓடிவந்துவிட்டேன்.

இதை பல வருடங்களாகக் கூறாமல் இருந்துவிட்டேன். மீ டூ விவகாரத்தின்போது கூட எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காதோ என்ற பயத்தில் கூறாமல் இருந்துவிட்டேன். ஆனால் இன்றைகும் அந்த இயக்கநர் பிரபலமாக இருந்து வருகிறார். அவரை சந்தித்தால் நான் அவரை அறைய வேண்டும். புதிய நடிகைகளுக்காக இதைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

பிரபல செய்தி நிறுவனமான ஆஜ்தக்கிற்கு நடிகை ரத்தன் ராஜ்புத் அளித்துள்ள இந்த நேர்காணல் கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சினிமா நடிகையும் பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பாளர் ஒருவர் மீது புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் சீரியல் நடிகை மோனோ சிங்கும் தனக்கு கடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நிலையில் மீண்டும் பாலிவுட் நடிகை ரத்தன் ராஜ்புத் கூறியுள்ள தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News