பொதுவாக எல்லோரும் ‘எம்.ஜி.ஆரை விட சிவாஜியே சிறந்த நடிகர்’ என்பர். பல மேடைகளில் சிவாஜியே சிறந்த நடிகர் என எம்.ஜி.ஆரே பேசியிருக்கிறார். சிவாஜியை எங்கே பார்த்தாலும் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்துவார். அதேநேரம் எம்.ஜி.ஆரின் நடிப்பை பற்றி சிவாஜியின் மனதில் என்ன இருந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.
சென்னை கமலா தியேட்டரின் அதிபர் சிதம்பரம் சிவாஜியுடன் நெருங்கி பழகியவர். ஒருமுறை அவர் சிவாஜியிடம் ‘எம்.ஜி.ஆரின் நடிப்பு பற்றி உங்களின் கருத்து என்ன?’ என கேட்டாரம். மனதுக்குள் எப்படியும் எம்.ஜி.ஆரின் நடிப்பை சிவாஜி மட்டமாகத்தான் பேசுவார் என சிதம்பரம் நினைத்தாராம். ஆனால், சிவாஜி சொன்னது வேறு எம்.ஜி.ஆர் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். நான் எனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறேன். அவரின் படங்களில் அவர் ஊருக்காக உழைப்பார். என்னுடைய படங்கள் குடும்ப படங்கள். அவருடையை பாணி படங்களில் எம்.ஜி.ஆர் மிகச்சிறந்த நடிகர். அந்த பாணி கதைகளில் அவர் பெரிய நடிகர்’ என எம்.ஜி.ஆரை பாராட்டினாராம்.
போட்டி நடிகர்களாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவரும் ஒருவரை ஒருவர் மதித்தும், புரிந்தும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.