தன்னுடைய இசை அனுபவங்களையும் நடிப்பு அனுபவங்களையும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது அவர், “ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த் வெளியிட்ட ஆல்பங்களில் நான் சவுண்ட் இன்ஜினியராக பணி புரிந்திருக்கிறேன். அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எனக்கு அறிமுகமானார்.
அப்போது அவருக்கு திருமணம் ஆன நேரம். தனது கணவர் தனுஷிடம் என்னை அறிமுகப்படுத்தினார். மேலும், என்னிடம் “தனுஷுக்கு இசை பற்றி கொஞ்சம் தெரியும். அவர் சில ஐடியாக்களை உங்களிடம் கேட்க வேண்டும் என நினைக்கிறார்” என்றார்.
ஐஸ்வர்யா இப்படி சொன்னதும் ஏதோ அவருக்கு கொஞ்சம் தான் தெரியும் என நினைத்து கொஞ்சம் பில்டப் பண்ணேன். ஆனால் பேசப் பேச தான் என்னைவிட அதிக இசைஞானம் பெற்றவராக தனுஷ் இருக்கிறார் என்பது புரிந்தது.
கடைசியில் எனக்கு குருவாக மாறிப்போனார் தனுஷ். அந்த அளவுக்கு இசையில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் அதிக இசைஞானம் கொண்டவராகவும் இருக்கிறார் தனுஷ்” என்றார்.