நடிகர் கொட்டாச்சி தனது சோக நினைவுகளை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில், “சரத்குமார் பரிந்துரையில் மாயி படத்தில் நடிக்கும் வாய்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கடைசியில் என்னை அந்த படத்தில் இருந்து தூக்கிட்டாங்க. பிறகுதான் அதற்குக் காரணம் வடிவேலு என தெரிந்தது. அதே போல அள்ளித்தந்த வானம் படத்தில் பிரபுதேவா உடன் படம் முழுக்க டிராவல் ஆகுற காட்சிகள். எல்லாமே படம் எடுத்து முடித்தனர். ஆனால், பிரபுதேவாவுடன் நான் நடித்த காட்சிகள் அத்தனையையும் எடிட்டிங்கில் தூக்கிட்டாங்க.. “ என்றார்.
மாயி படத்தில் வடிவேலுவும், அள்ளித்தந்த வானம் படத்தில் விவேக்கும் முக்கிய நகைச்சவை நடிகர்களா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த இருவரையும்தான் கொட்டாச்சி சொல்கிறார் என சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.