1993-ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் சங்கவி. தொடர்ந்து, விஜயுடன் ரசிகன் படத்தில் நடித்தார். பிறகு நாட்டாமை, லக்கிமேன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஐடி நிபுணரான வெங்கடேஷ் என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2020-ம் ஆண்டு குழந்தை பிறந்தது.
சமீபத்தில் பேட்டி அளித்த இவர், “முதல் குழந்தை உருவான 7-வது வாரத்தில் இதய துடிப்பு இல்லை என்று கூறி அபார்ஷன் செய்ய வேண்டிய நிலை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த நிலையிலும் சிலர், என்னை கேலி செய்து பேசினர். இதனால் மனதில் ஆறாத வடு ஏற்பட்டுள்ளது. எந்த ஒருரையும் அவர் சிரமத்தில் இருக்கும்போது கிண்டல் செய்யாதீர்கள்” என உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார்.