தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருபவர், சுந்தர் சி. 1995-ஆம் ‘முறை மாமன்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகி ராமன், நாம் இருவர் நமக்கு இருவர், அரண்மனை.. என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துவருகிறார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “விஜயிடம் நிறைய கதைகளை சொன்னேன். ஒவ்வொரு முறையும் அடுத்து பார்க்கலாம் என்றார். ஒரு கட்டத்தில், இது தான் கடைசி என முடிவு செய்து ஒரு கதை சொன்னேன். அதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை.
அதற்கு பின் அவருக்காக கதை உருவாக்குதையே விட்டுவிட்டேன். இனியும் அவரை வைத்து படம் எடுக்க வாய்ப்பு இல்லை” என ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளார் சுந்தர் சி.