கிரிக்கெட் வீரரான டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து தயாரிக்க, ரமேஷ் தமிழ்மணி இயக்கும் எல்.ஜி.எம். படத்தில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘சலனா’ பாடல் வருகிற 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.