எம்.ஆர்.ராதா குறித்து பத்திரிகையாளர் செல்வம் கூறும்போது, “சினிமாவில் எம் ஆர் ராதா கொடூர வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் நிஜ வாழ்க்கையில் எம் ஆர் ராதாவிடம் பல நல்ல குணங்கள் இருந்ததாம்.
அதாவது தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்க மாட்டார், சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து விடுவார். ‘நம்மை நம்பி பணத்தை போடும் தயாரிப்பாளர்களின் பணத்தை வீணாக்க கூடாது’ என்று கூறுவார்.
அதுமட்டுமின்றி ‘நமக்காக மற்ற எல்லோரும் காத்திருப்பார்கள் அவர்கள் நேரத்தை நாம் வீணடிக்கக் கூடாது’ என பிற நடிகர்களுக்கும் அறிவுரை வழங்குவார்.
ஆனால் படங்களில் நல்லவர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு பெரிய நடிகர் தொடர்ந்து படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார்.
பொறுத்துப் பார்த்த எம்.ஆர்.ராதா, “நான் நல்லவன். ஆனா வில்லன் வேசம் கொடுக்குறானுங்க. ஆனா, கெட்டவனுக்கெல்லாம் நல்லவன் மாதிரி வேசம் கொடுக்கிறானுங்க” என்று சொல்ல. அந்த நடிகர் அதிர்ந்துபோய்விட்டார்.
ஆனால் அதன் பிறகும் அந்த நடிகர் தாமதமாகத்தான் வந்துகொண்டு இருந்தார்” என்றார் பத்திரிகையாளர் செல்வம்.